விஷால் எப்போதும் ஆக்சன் பண்ணுபவர் என்பது தெரியும் தான்.. ஆனால் இயக்குனர் பாண்டிராஜின் ஆக்சன் அவதாரத்தைத்தான் ரசிகர்கள் பிரமிப்புடன் பார்க்கிறார்கள்.. அந்த பிரமிப்பை கொஞ்சம் கூட விலகவைடாமல் பொங்கல் அன்று ‘கதகளி’ ஆட காத்திருக்கிறார்கள் இருவரும்.. சென்னை மாறும் கடலூர் மீனவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனை தான் கதைக்களம்.
போனில் சொன்ன ஒரே ஒரு வார்த்தை விஷாலின் வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டு விடுகிறது. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மொத்த கதையும். ஒரு கொலை சம்பவம் நடந்துவிட, அதை யார் செய்திருப்பார்கள் என ஒவ்வொருவராக சந்தேகிக்க வைத்து இறுதியில் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்களாம்.
விஷாலுக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா என்கிற இந்த புது காம்பினேஷனே செம பிரஷ்ஷாக இருக்கிறது. படம் புல் ஆக்சன் மூடில் பயணிப்பதால் இன்டர்வெல்லுக்கு பிறகு பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லையாம். படத்தில் மொத்தம் இரண்டே பாடல்கள் தான் என்றாலும், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பேக்ரவுண்ட் மியூசிக்கில் பிரித்து மேய்ந்திருக்கிறாராம்