பல விளம்பரப்படங்கள், குறும்படங்களை இபக்கிய, அவற்றுக்காக விருதுகளும் பெற்ற கிராந்தி பிரசாத் என்பவர் ‘சந்தோஷத்தில் கலவரம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் ரக படம் என்றாலும் இதில் நட்பு, காதல், அன்பு, காமெடி, ஆன்மிகம் எல்லாம் இதில் கலந்துள்ளன.
ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதை மையாக வைத்து’ தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதலாக உருவாகியுள்ள படம் தான் இந்த சந்தோஷத்தில் கலவரம்’. நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி .கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ரவிமரியா வித்தியாசமான ரோலிலும் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நேற்று வெளியிட்டார்.