தமிழ் திரையுலகத்தில் வரும் மே 30 முதல் நடக்கவிருந்த ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டது என விஷால் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக அவர் பேசியதாவது,
“நாம் பயந்தது போல ஜி.எஸ்.டி வரி தற்போது 28% அறிவிக்கவுள்ளார்கள். நாங்கள் எந்தவொரு அரசாங்கத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழ் திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்து தேர்வு செய்துள்ளீர்கள்.
தணிக்கை முடிந்து வரிச்சலுகை சான்றிதழ் வாங்கி ஜுனில் வெளியாக நிறைய படங்கள் தயாராக உள்ளது. ஜுலையில் வெளியிட்டால் ஜி.எஸ்.டி வரி சேர்ந்து வெளியிடும் சூழல் ஏற்படும் என்றார்கள். தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்வமணியும் இது தொடர்பாக பேசினார்கள். அவருடைய ஆலோசனையை ஏற்று தற்போது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.