விஷால் படங்கள் ஓடுதோ இல்லையோ கணித்து பார்த்தால், அவர் தனது படங்களை சொன்ன தேதியில் ரிலீஸ் பண்ணி வருவதை உணரமுடியும்…. காரணம் ‘மதகஜராஜா’ படத்தில் கற்றுக்கொண்ட வேதனையான பாடம் தான்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ படத்தை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக ரிலீசே பண்ணமுடியவில்லை பார்த்தீர்களா..?
அவ்வளவு உழைப்பை கொட்டியும், அந்தப்படம் வெளியாகாமல் தனது உழைப்பு பெட்டிக்குள் பூட்டப்பட்டுக்கிடக்கும் அவலம் இனி வரக்கூடாது என்றுதான் தானே சொந்தமாக தனது படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் விஷால்.. அதனால் சொன்ன தேதியில் படங்களை ரிலீஸ் பண்ண அவரால் முடிகிறது..
இந்த வருடம் கூட அவர் நடிகர் சங்க தேர்தல், மழைவெள்ள நிவாரண உதவி என நிற்க நேரமில்லாமல் சுற்றினாலும் தனது ஆம்பள, பாயும் புலி ஆகிய படங்களை குறித்த நேரத்தில் வெளியிட்டார். இதோ இப்போது பாண்டிராஜின் இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘கதகளி’ படத்தையும் பொங்கல் ரிலீஸாக அறிவித்துவிட்டார். இந்த விஷயத்தில் அந்நாளைய தயாரிப்பாளரான சாண்டோ சின்னப்பா தேவரின் பாணியைத்தான் விஷால் பின்பற்றுகிறார்.