பொதுநல வழக்கு தொடர்ந்தார் விஷால்.. காரணம் இதுதான்..!

மக்கள் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விஷயங்களில் தங்களது முழு எதிர்ப்பையும் கட்ட துவங்கி விட்டனர்.. மாதத்திற்கு ஒரு பிரச்சனை என்பது போல ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த நிலையில் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தி தடை செய்யச்சொல்லி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்..

இந்தநிலையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்துவரும் விஷால் இப்போது, இந்த திட்டத்தை நிறுத்தவேண்டும் என சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அவரே நேரில் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை எடுத்துரைக்க உள்ளார் என்றும் தெரிகிறது..

HydrocarbonNeduvasalVishalநெடுவாசல்விஷால்ஹைட்ரோ கார்பன்