சுராஜ் இயக்கத்தில் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்து முடித்துவிட்ட விஷால், வரும் நவம்பர் மாதம் அந்தப்படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துவிட்ட கையோடு, அதை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். அக்சரா ஹசன், அனு இம்மானுவேல் கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப்படத்தில் வினய் மற்றும் பிரசன்னா இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
தான் நடிக்கும் ஒரு படம் வளர்ந்துகொண்டு இருக்கும்போதே அடுத்த படத்திற்கான பூஜை போடுவதோ அல்லது அறிவிப்பு வெளியிடுவதோ விஷாலின் தனி ஸ்டைல்.. அந்தவகையில் அறிமுக இயக்குனர் மித்ரன் என்பவரது டைரக்சனில் தான் நடிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜையை எளிமையாக நடத்தியுள்ளார் விஷால்.. இந்தப்படத்தை விஷாலே தயாரிக்கவும் செய்கிறார். இந்தபடத்தின் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருக்கிறார்.