நடுநிலையாளர்கள் விஷால் பேச்சின் நியாத்தை புரிந்துகொள்வார்கள்..!


சில நாட்களுக்கு முன்பு காவிரி பிரச்னை மற்றும் ஈழத்தமிழர் பிரச்சனையில் நடிகர் சங்கம் தலையிடாது என விஷால் கூறினார். அதற்கு சில தரப்பினர், குறிப்பாக அரசியல் நடத்துபவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காவிரி பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிடாது என்பதற்கான காரணம் ஏதோ உணர்வு இல்லாத விஷயமாக நீங்கள் நினைக்கக்கூடாது என இதற்கு விஷாலே மறுபதில் அளித்துள்ளார்.

மேலும் காவிரி பிரச்னை என்பது அரசாங்க பிரச்னை, மேலும் அரசியல் பிரச்னை அதில் நடிகர் சங்கம் தலையிடக்கூடாது. அவ்வளவு பெரிய பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிடுவது முறையல்ல. மேலும் தமிழக அரசு இந்தப்பிரச்சனைகளில் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு இருக்கிறது என்றும் கூறியிருந்தார் விஷால்..

கடந்த வருடங்களில் இந்தப்பிரச்சனைக்காக நடிகர்கள் தரப்பில் இருந்து குரல் கொடுக்கப்பட்டபோது சில கசப்பான நிகழ்வுகள் நடைபெற்றதை கவனித்து பார்த்தால் விஷால் கூறியதில் அர்த்தம் உள்ளது புரியும்.. அரசியல் மூலமாக பேசி தீர்க்க முனைவதை விடுத்து, நடிகர்கள் நடத்திய சில போராட்டங்களின் விளைவாக இரண்டு தரப்புக்கும் உள்ள பிரச்சனையின் வீரியம் கூடத்தானே செய்ததே தவிர குறையவில்லை. அதனால் இந்தப்பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறியுள்ள விஷால் பேச்சின் நியாத்தை நடுநிலையாளர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

Pandavar AniVishal