எண்பதுகளில் காமெடி நடிகையாக வளம் வந்தவர் தான் மூத்த நடிகை பிந்துகோஷ். தற்போது அவர் மருத்துவ உதவி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக ஒரு வார இதழில் வந்த செய்தியை அறிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷாலின் கவனத்துக்கு சென்றது.
இதை தொடர்ந்து அவர் தனது தேவி அறக்கட்டளை மூலம் உடனடி நிதி உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கியும், அதனை தொடந்து மாதந்தோறும் ரூ.2500 உதவித்தொகை வழங்கிடவும் உத்தரவிட்டார். அதற்கான உதவித்தொகையை மூத்த நடிகை பிந்துகோஷ் அவர்களிடம் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் வழங்கினார்.
அதுமட்டுமின்றி பிந்துகோஷ் அவர்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத காரணத்தால் அவரை சங்கத்தில் இணைத்து மேற்கொண்டு நடிகர் சங்கத்தின் மூலம் உதவிகள் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார் விஷால்.