அடிக்கடி தூங்கிவிடும் நோய்க்கு ஆளான விஷால்..!


‘காவலன்’ படத்தில் ராஜ்கிரணிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர், அந்தப்படத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே, நின்று கொண்டிருக்கும்போதே திடீரென தூங்கிவிடுவார். அதேபோன்ற ஒரு கேரக்டரில் தான் தற்போது ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடிக்கிறார் விஷால்.

அடிக்கடி தூங்கி விடும் நோயால் பாதிக்கப்படும் விஷால் முக்கியமான அல்லது இக்கட்டான நேரங்களில் கூட தூங்கி விடுவாராம். குறிப்பாக அவர் வேலைக்கு செலக்ட் ஆன விஷயத்தை கேட்டுக்கொண்டு இருக்கும்போதே தூங்கிவிடுவாராம்.

விஷாலின் இந்த வித்தியாசமான கதாபாத்திரம் புதிதாக இருக்கும் என்று சொல்லாமல் சொல்கிறது சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீஸர். திரு இயக்கும் இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் லட்சுமி மேனன்..

AnjaliGemini Film CircuitMada Gaja RajamanobalaMGRSamarSanthanamSundar CThiruVaralaxmiVijay AntonyVishal
Comments (1)
Add Comment