விஷாலின் ‘துப்பறிவாளன்’ நாயகி பயோடேட்டா..!

மிஷ்கின் டைரக்சனில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் மலையாள நடிகையான அனு இம்மானுவேல்.. தெலுங்கு நாயகி ராகுல் பிரீத் சிங் அந்தப்படத்தில் இருந்து விலகியதால், தமிழுக்கு வரும் வாய்ப்பு இந்தப்படம் மூலமாக அனு இம்மானுவேலுக்கு கிடைத்துள்ளது.. இவரை பற்றிய சில விபரங்கள் உங்களுக்காக.

சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான ‘சொப்ன சஞ்சாரி’ படத்தில் ஜெயராமின் மகளாக, பள்ளி செல்லும் மாணவியாக நடித்த இந்த அனு இம்மானுவேல், மலையாள தயாரிப்பாளரான தங்கச்சன் இம்மானுவேலின் மகளும் ஆவார்.

இவரைத்தான் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சார்லி’ படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் கேட்டார்களாம். ஆனால் படிப்பு தடைபட்டுவிடும் என கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டு பாரினுக்கு பறந்துவிட்டார் அனு. அதன்பின் தான் அந்த வாய்ப்பு பார்வதிக்கு சென்றது.

அதன்பின்தான் ஆக்சன் ஹீரோ பிஜூ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் மீண்டும் துல்கர் சல்மான் நடிக்கும் இன்னொரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் துல்கரின் படத்தில் முதல் ஷெட்யூலில் நடித்த அணு இம்மானுவேல், அந்த கேரக்டருக்கு செட்டாகவில்லை என விலக்கி விட்டார்கள்.

இதற்கிடையே தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துவிட்ட இவருக்கு, இப்பொது தமிழில் விஷாலுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது… தமிழ் பீல்டு அவருக்கு ஒர்க் அவுட் ஆகுமா என பார்ப்போம்..

Anu emmaanuelMyshkinThupparivalanVishalமிஷ்கின்விஷால்