பாதிக்கப்பட்ட படங்களுக்கு மறு ரிலீஸ் தேதி ; விஷால் பதில்..!


கேளிக்கை வரி தொடர்பான பிரச்னையால் புதிய படங்களை வெளிடுவதை கடந்த ஒரு வாரகாலமாக நிறுத்தி வைத்திருந்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். தற்போது வரியில் 2 சதவீதத்தை அரசாங்கம் குறைத்து அறிவித்துள்ளதை தொடர்ந்து இனி படங்கள் தொடர்ந்து ரிலீஸாவதில் எந்த சிக்கலும் இருக்காது..

ஆனால் அதேசமயம். தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த திடீர் முடிவால், அக்-5, 6 ஆகிய தேதிகளில் வெளியாக திட்டமிட்டிருந்த படங்களால் ரிலீசாக முடியாமல் போனது. இனி அடுத்ததாக அக்-18ல் தீபாவளி ரிலீஸ் படங்கள் வெளியாவதாலும் அடுத்து வரும் அக்-27ல் ஏற்கனவே சில படங்கள் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டதாலும் பாதிக்கப்பட்ட படங்களுக்கு நவ-3ஆம் தேதி ரிலீஸ் தேதி ஒதுக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக விஷால் கூறியுள்ளதாக தெரிகிறது..
Attachments area

Producer CouncilVishalதயாரிப்பாளர் சங்கம்விஷால்