‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ விழாவில் மிஷ்கின் உடைத்த ரகசியம்..!

விஜய் நடித்த ‘பிரியமுடன்’, ‘யூத்; மற்றும் ‘ஜித்தன்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் வின்சென்ட் செல்வா.. தற்போது புதுமுகம் சஞ்சய்யை கதாநாயகனாக வைத்து ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. படத்தின் கதாநாயகியாக அருந்ததி நாயர் நடித்துள்ளார்.. இவர்கள் தவிர, தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆடுகளம் முருகதாஸ், மனோபாலால, சோனா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியே இதில் இருக்கிறது.. இந்தப்படத்திற்கு புதுமுகமான தேவராஜ் என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார்.. இயக்குனர் மிஷ்கின் வின்சென்ட் செல்வாவின் சீடரும் கூட.. இந்த நிகழ்வில் பேசிய மிஷ்கின், தான் வின்சென்ட் செல்வாவுடன் பணியாற்றியபோது, ‘யூத்’ படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ‘ஆள் தோட்ட பூபதி’ பாடல் பற்றிய ரகசியம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

அந்தப்படத்திற்காக குத்துப்பாடல் ஒன்றை கவிஞர் வாலி எழுதிக்கொடுத்துவிட்டாராம்.. ஆனால் இணை இயக்குனரான மிஷ்கினுக்கோ தனது நபரான கபிலன் எழுதிய பாடலை உள்ளே சேர்த்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.. ஆனால் அந்த யோசனையை இயக்குனரும் தயாரிப்பாளரும் மறுத்துவிட்டார்களாம். ஆனாலும் மணிசர்மா பாடல் கம்போஸ் பண்ணும்போது வாலி எழுதிய பாடலை மாற்றி கபிலனின் பாடலை வைத்துவிட்டாராம் மிஷ்கின்.. அதைப்பாடிய சங்கர் மகாதேவனுக்கும் தமிழ் தெரியாது என்பதால் இந்தப்பாடலை பாடி கம்போசிங்கையும் முடித்துவிட்டார்கள்..

பின்னர் பாடலைக்கேட்க வந்த வின்சென்ட் செல்வாவுக்கும் தயாரிப்பாளருக்கும் அதிர்ச்சி.. ஆனால் பாடல் நன்றாக இருக்கவே, அதையே வைத்துக்கொள்ளலாம் என இயக்குனர் சொல்லிவிட்டாராம்.. ஆனால் அதற்காக கவிஞர் வாலிக்கு பயந்து கொஞ்ச நாள் வின்சென்ட் செல்வாவும் தானும் தலைமறைவாக சுற்றிய கதையையும் போட்டுடைத்தார் மிஷ்கின்.

DevarajMyskinVaaliVirumandikum SivanandikumWinston selva