ஆனால் இவர் வில்லனாக நடித்தால் அது சீரியஸாக இருக்குமா இல்லை சிரிப்பை வரவழைக்குமா என்பது படம் வந்தால் தான் தெரியும். காரணம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ படத்தில் இவர் விஜய்சேதுபதியிடம் கையை மடித்துவிட்டுக்கொண்டு வீரவசனம் பேசி அடிவாங்குவது இன்றுவரை பேஸ்புக் கமெண்ட்டுகளில் ஹைலைட்டாக இருக்கிறது.
மேலும் இந்த பெயரிடப்படாத படத்தில் கருணாகரனும், ஜெயபிரகாஷும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வில்லனாக நடித்துக்கொண்டே இசையமைப்பையும் கவனிக்கிறார் விபின் சித்தார்த்.. பொள்ளாச்சி அருகில் நடைபெற்று வரும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மார்ச்-5ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.