ஒரு காலத்தில் கேன்சர் மட்டுமே ஆக்கிரமித்து இருந்த தமிழ்சினிமாவில் கடந்த பத்து வருடங்களாக மனிதனுக்கு ஏற்படும் வித்தியாசமான நோய்களை வைத்து படங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக மனிதனுக்கு உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை வைத்து பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில் மனிதனின் மன நலத்தில் ஏற்படும் ‘மன சுழற்சி’ என்கிற நோயை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தான் வினோதன்’.
இந்தப்படத்தை பிரபுதேவா தயாரிக்க, விக்டர் ஜெயராஜ் என்பவர் இயக்கிவருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பாக 28 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பதினைந்து வருடங்களுக்கு பிறகு தான் நடிக்கும் புத்திசாலித்தனமான கதையம்சம் உள்ள படம் இது என இதில் நடிக்கும் குணச்சித்திர நடிகர் மௌலி கூறியுள்ளாராம். இந்தப்படத்தின் பாடல்களுடன் வசனத்தையும் மதன் கார்க்கி எழுதுகிறார்.