தமிழில் வெளியாகும் ராம்சரணின் ‘வினய விதேயா ராமா’..!

தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான “வினய விதேயா ராமா” தமிழில் வெளியாகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓபராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

மேலும் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாஹசம், என்று பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக “வினய விதேயா ராமா” உருவாகியுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் சண்டை காட்சி படம் பிடிக்க படமாக்க மட்டும் பதினோரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

டிவிவி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் “வினயை விதேயா ராமா”பிப்ரவரி முதல் வாரம் தமிழ் நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.

Devi Sri PrasadVivek Oberaiஆர்யன் ராஜேஷ்கியாரா அத்வானிசினேகாஜெபிடிவிவி என்டர்டைன்மெண்ட்ஸ்தேவிஸ்ரீ பிரசாத் இசைபண்டி ரமேஷ்பாரத் என்னும் நான்பிரகாஷ் பிலிம்ஸ்பிரசாந்த்போயப்பட்டி சீனுமதுமிதாமுகேஷ் ரிஷிரவி வர்மன்ராம் சரண்ரிஷி பஞ்சாபிவினய விதேயா ராமாவிவேக் ஓபராய்ஹரீஷ் உத்தமன்