மாமனார் ஊரில் இனியாவுடன் விமல் ஆட்டம்..!

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் வசனப்பகுதிகளை எல்லாம் படம்பிடித்துவிட்ட இயக்குனர் ஆர்.கண்ணன் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இப்போது படத்தின் பாடல்களை வரிசையாக சுட்டுத்தள்ளி வரும் கண்ணன் முதலில் தனுஷ்கோடியில் விமல், பிரியா ஆனந்த், மாற்றும் விஷாகா சம்பந்தப்பட்ட பாடல்காட்சியை படமாக்கினார்.

தொடர்ந்து விமல், பிரியா ஆனந்த் நடித்த பாடல் காட்சி ஒன்றை கொடைக்கானலில் படமாக்கினார். இந்தப்பாடலை கொடைக்கானலில் உள்ள 100 வருட பழமை வாய்ந்த கற்கோவில் ஒன்றை கண்டுபிடித்து அதில் படமாக்கியுள்ளார் கண்ணன்.

அடுத்ததாக தற்போது திண்டுக்கல்லில் முகாமிட்டுள்ள கண்ணன் இங்கு ஒரு பாடலை படமாக்க இருக்கிறார். திண்டுக்கல், விமலின் மாமனார் ஊர். இங்கு விமலுடன் சேர்ந்து இந்த ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்புத் தோற்றமாக ஆட இருக்கிறார் இனியா. இந்தப்பாடலையும் சில பேட்ச் ஒர்க் காட்சிகளையும் முடித்துவிட்டால் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்கிறது யூனிட்.

 

IniyaOru Oorula Rendu RajaPriya AnandR KannanVimalVishakaஆர் கண்ணன்இனியாஒரு ஊர்ல ரெண்டு ராஜாபிரியா ஆனந்த்விமல்விஷாகா