விமல் – ஆனந்தி கூட்டணியில் உருவாகும் ‘மன்னர் வகையறா’..!

‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தை ஜூலை-1ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்துகொண்டு இருக்க, அதே சூட்டோடு சூடாக தங்களது அடுத்த படத்தை தயாரிப்பதற்கான வேலைகளில் ஏற்கனவே இறங்கிவிட்டது அரசு பிலிம்ஸ். படத்தின் பெயர் ‘மன்னர் வகையறா’

அதை உறுதிப்படுத்துகிற மாதிரி காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். விமல், கயல் ஆனந்தி, பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.

இதுநாள் வரை சூரியுடன் காமெடிக்கூட்டணி அமைத்துவந்த விமல், இப்போது ரோபோ சங்கருடன் புதிதாக கூட்டணி அமைத்திருப்பதும் ஸ்பெஷல் தான். ‘மன்னர் வகையறா’ படத்தில் கிட்டத்தட்ட சோலோ காமெடியனாகவே மாறியிருக்கும் ரோபோ சங்கரின் காமெடி மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என நம்பலாம்.

AnandhiVimalஆனந்திமன்னர் வகையறாவிமல்