விக்ரம் சகோதரி மகன் ஹீரோ ஆகிறார்..!

பிரபலங்கள் அதாவது நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாவது போல அவர்கள் குடும்பத்தில் உள்ள உறவுக்காரர்களின் வாரிசுகள் கூட சம்பந்தப்பட பிரபலத்தின் பெயரை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகமாவதும் அவ்வப்போது நடக்கவே செய்கிறது.

சமீபத்தில் தான் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தநிலையில் விக்ரமின் குடும்பத்திலிருந்து அவரது சகோதரியின் மகன் அர்ஜுமன் என்பவர் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ள இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தினரின் அரவனைப்போடு கலையுலகத்திற்கு அறிமுகமாகிறார் அர்ஜுமன்.

ArjumanDruvVikramஅர்ஜுமன்துருவ்விக்ரம்