‘விக்ரம் வேதா’ வழக்கமான போலீஸ்-ரவுடி படம் அல்ல..!

அடுத்தததாக திரைக்கு வர இருக்கும் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் தான் விக்ரம் வேதா.. இரட்டை இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி இணைந்து இயக்கியுள்ள இந்தப்படத்தில் முதன்முறையாக விஜய்சேதுபதியும் மாதவனும் இணைந்து நடித்துள்ளனர். கதிர் முக்கிய வேடத்தில் நடிக்க, வரலட்சுமி, ஷ்ரத்தா தாஸ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இது வழக்கமான போலீஸ்-ரவுடி படம் போல தெரிகிறதே என்கிற கேள்வி இயக்குனர்களிடம் முன் வைக்கப்பட்டது.. இதற்கு பதிலளித்த புஷ்கர்-காயத்ரி, இது வழக்கமான போலீஸ் ரவுடி கதை அல்ல.. ரெண்டு பேரிடமுமே நல்லவன், கேட்டவன் என்கிற பக்கம் இருக்கிறது.. அதாது கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையேயான சாம்பல் நிறம்.. அதைத்தான் இந்தப்படத்தில் காட்டியுள்ளோம்” என கூறினார்கள்..

ரசிகர்களிடம் நன்கு பிரபலமான அம்புலிமாமா கதையான விக்ரமாதித்யன், வேதாளம் கதையை அடிப்படையாக வைத்து இந்தப்படத்தின் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்களாம்.

MadhavanVijay SethupathiVikram Vedhaமாதவன்விக்ரம் வேதாவிஜய் சேதுபதி