விஜய் மில்டன் டைரக்சனில் விக்ரம் நடித்துள்ள ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.. இந்தப்படத்திற்கான விக்ரம் மற்றும் விஜய் மில்டன் உழைப்பு அபாரம் என படம் பார்த்த அத்தனை பேருமே பாராட்டி வருகிறார்கள்.. இந்நிலையில் படம் வெளியான மறுநாள் விஜய் மில்டன் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் விக்ரம்..
விக்ரமை அந்த காலை நேரத்தில் எதிர்பார்த்திராததால் விஜய் மில்டன் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி.. திடீரென அவர் வந்ததால், நம் கிராமத்து வீடுகளில் டீ போட்டு சொம்பில் கொண்டு வந்து டம்ளரில் ஊற்றி தருவதுபோல விஜய் மில்டன் வீட்டில் விக்ரமுக்கு யதார்த்தமான உபசரிப்பு கிடைத்துள்ளது.