விக்ரம்-பிருத்விராஜ்-மாதவன் கூட்டணியில் புதிய படம்..?

 

தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது என்கிற ட்ரெண்டையும் தாண்டி, தான் இயக்கிவரும் ‘புறம்போக்கு’ படம் மூலம் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் மூவரையும் இணைத்து அடுத்த மல்டி ஸ்டாரர் படங்கள் தமிழிலும் உருவாவதற்கு அச்சாரம் போட்டு வைத்துவிட்டார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்..

இப்போது அதே பாதையை பின்பற்றி தமிழில் இன்னொரு படம் உருவாக இருக்கிறதாம். விக்ரம், மாதவன், பிருத்விராஜ் என முன்னணி நடிகர்களை ஒன்று சேர்த்து இதில் நடிக்கவைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றனவாம்.. இந்தியில் வெளியான ‘ஜிந்தகி நா மிலேகி டோபரா’ என்கிற படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாக இருக்கிறதாம்..

ஆர்யாஎஸ் பி ஜனநாதன்ஜிந்தகி நா மிலேகி டோபராபிருத்விராஜ்மாதவன்விக்ரம்விஜய் சேதுபதிஷாம்