விக்ரம் பிரபு நடித்துள்ள இது என்ன மாயம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்க இருக்கும் படத்திற்கு பெயர் ‘வீர சிவாஜி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுக்கு என்னவெல்லாம் சிறப்பு இருக்கிறது பாருங்கள்…
அவரது தததாவான நடிகர் திலகத்தின் பெயர் வந்துவிடுகிறது. சூப்பர் ஸ்டார் நடித்த, ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி’ பட டைட்டிலும், அஜித்தின் வீரம் பட டைட்டிலும் இணைந்துள்ளது. அதுமட்டுமல்ல மராட்டிய மாமன்னன் பெயரையும் முழுதாக தாங்கியுள்ளது.
இந்தப்படத்தை இயக்குபவர் அருள்நிதி நடித்த ‘தகராறு’ படத்தை இயக்கிய விநாயக் தான். தனது காதலனால் தான் பட்ட அவமானத்திற்கு பழிவாங்க நினைக்கும் காதலி, தனது காதலனையே கொல்வது போல க்ளைமாக்ஸ் வைத்து அனைவரையும் அதிரவைத்தவர், வீர சிவாஜியில் என்ன பண்ண காத்திருக்கிறாரோ..?