கௌதம் மேனன் தனது எண்ணத்தில் நீண்ட நாட்களாக உருவாக்கி வைத்திருந்த ‘துருவ நட்சத்திரம்’ கதையை படமாக்காமல் ஓயமாட்டார் போலும்.. சூர்யாவை வைத்து உருவாக வேண்டிய இந்தப்படம் சில காரணங்களால் அவர்களுக்குள் ஏற்பட்ட சின்ன மனவருத்தத்தால் இப்போது இடம் மாறி விக்ரம் கைவசம் வந்து சேர்ந்திருக்கிறது.
இன்று பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். பரபர ஆக்சன் கதையாக இந்தப்படம் உருவாக இருக்கிறது என்பது டைட்டிலுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள டேக்லைனான ‘யுத்தகாண்டம்’ என்கிற வார்த்தை மூலமாக தெளிவாக தெரிகிறது. இந்தப்படத்தில் அனைத்து ஏரியாவிலும் முதன்மை டெக்னீஷியன்கள் பணிபுரிவார்கள் என்றே தெரிகிறது.