ஐம்பதில் அடியெடுத்து வைக்கிறார் விக்ரம்..!

தன்னம்பிக்கை.. மனம் தளராமல் போராடும் குணம்.. லட்சியத்தை அடையும் வெறி.. இதுதான் விக்ரம். சேதுவில் ஆரம்பித்த அவரது உக்கிர தாண்டவம் இன்றுவரை குறைந்தபாடில்லை. அகோர நடிப்பு பசி கொண்டதாலோ என்னவோ கமர்ஷியல் வெற்றிகளை இவர் கருத்தில் கொள்வதில்லை.

அதற்கேற்ற மாதிரி காசி, பிதாமகன், தெய்வத்திருமகள் ஆகிய படங்களும் அவரது நடிப்பிற்கு மகுடம் சூட்டவும் தவறவில்லை. இதோ இப்போது மீண்டும் ஷங்கருடன் இணைந்து ‘ஐ’ படத்தில் மீண்டும் புதிய சகாப்தம் ஒன்றை படைத்துவிட்டாரே… தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்துவருகிறார் விக்ரம்.

அடுத்து கௌதம் மேனன், அதை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் சிஷ்யர் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ள விக்ரம் இன்று தனது ஐம்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் விக்ரமிற்கு நமது ‘behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

காசிசேதுதெய்வத்திருமகள்பிதாமகன்விக்ரம்விஜய் மில்டன்