உண்மையிலே அனைத்து தரப்பு ரசிகர்களும் பாகுபாடு இன்றி விஜய்சேதுபதியின் நடிப்பை ரசிப்பதால் தான் அவருக்கு மக்கள் செல்வன் என்கிற பொருத்தமான பட்டம் வழங்கப்பட்டது.. இப்போது தொடர்ந்து தனது படங்களின் வெற்றிமூலம் தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என அனைவருக்கும் வசூலை வாரி வழங்குவதால் இன்னொரு புதிய பட்டத்தையும் அவருக்கு சூட்டியுள்ளார்கள்.
கடந்த ஞாயிற்று கிழமை நடந்த ரிட்ஸ் சவுத் ஸ்கோப் லைப் ஸ்டைல் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘மோஸ்ட் பேங்கபில் யங் ஆக்டர் (Most Bankable Young Actor) என்னும் விருது வழங்கப்பட்டது. இவ்வருடத்தில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி கதை தேர்விலும், தேர்வு செய்த கதையிலும் அதிக கவனம் செலுத்தி அதை சிறப்பாக செய்து வருகிறார். இதை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்தவிழாவில் விழாவிற்கு திருமதி. லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த், ஸ்ரேயா ரெட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.