“விஜய்சேதுபதி நடிக்கலை.. கிருஷ்ணா நடிச்சிருக்கார்..” – தமன் கொடுத்த சர்டிபிகேட்..!

 

விஜய்சேதுபதி, கிருஷ்ணா இரட்டை கதாநாயகர்களாக நடித்துள்ள ‘வன்மம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று மாலை நடந்தது. ஆச்சர்யமான விஷயமாக படத்தின் நாயகர்கள், நாயகி சுனைனா உட்பட படக்குழுவினர் ஒருவர் கூட மிஸ்ஸாகமல்  இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதற்கு ஒரே காரணமாக அவர்கள் அனைவரும் குறிப்பிட்டது இயக்குநர் ஜெய்கிருஷ்ணாவைத்தான். காரணம் கிட்டத்தட்ட 25 வருட போராட்டங்களுக்கு பிறகு இப்போது தான் அவர் இயக்குனராக மாறியுள்ளார். அதனால் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக படப்பிடிப்பிலும் சறி.. இந்த விழாவிலும் சரி.. அனைவரும் கலந்துகொண்டு அவர்மேல் தாங்கள் கொண்டிருந்த மரியாதையை வெளிப்படுத்தினார்கள்.

நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். எந்த ஒரு படத்தையும் பின்னணி இசைக்கோர்ப்பின்போதே பார்த்துவிடுகின்ற பாக்கியம் கிடைப்பது இசையமைப்பாளர்களுக்குத்தானே..

அந்தவகையில் இந்தப்படத்தை பார்த்த தமன், மேடையில் பேசியபோது, “விஜய்சேதுபதி இந்தப்படத்தில் நடிக்கவில்லை.. காரணம் அவர் இயல்பாக அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.. ஆனால் கிருஷ்ணா இந்தப்படத்தில் தான் முதன்முறையாக நடித்திருக்கிறார்” என விஜய்சேதுபதியை புகழ்ந்துவிட்டு போகிறபோக்கில் கிருஷ்ணாவை ஜாலியாக வாரியும் விட்டார்.

JaikrishnaKreshnaNemichand JhabakS S ThamanSunainaVanmamVijay Sethupathiஎஸ்.எஸ்.தமன்கிருஷ்ணாசுனைனாஜெய்கிருஷ்ணாநேமிசந்த் ஜபக்வன்மம்விஜய்சேதுபதி