“நல்லது செய்றதுக்கு எதுக்கு விளம்பரம்” ; சந்தேகம் தீர்ந்த விஜய்சேதுபதி..!

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, வசதியில்லாத நோயாளிகளுக்காக இலவசமாக சிகிச்சை, ஆபரேஷன் உள்ளிட்ட சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ படத்தையும் எடுத்துள்ளனர்.. மதுரையில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தும் விழாவில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய விஜய்சேதுபதி, “ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்வது நல்ல விஷயம்.. ஆனால் நல்ல விஷயத்துக்கு எதற்கு விளம்பரம் செய்யவேண்டும் என்று தான் எனக்கு முதலில் தோன்றியது.. ஆனால் இன்று வசதியற்றவர்கள் தங்களது வீட்டில் உள்ள ஒருவரை ஆபத்து சமயத்தில் அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றனர்.. அதன்பின்னர்தான் இதற்கு தேவையான பணத்தை எப்படி புரட்டுவது என்பது மலைப்பாக மாறிவிடுகிறது.

நான் துணை நடிகனாக இருந்த காலகட்டத்தில் எனது தந்தையையும் இப்படி ஒரு இக்கட்டான தருணத்தில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டேன்.. ஆனால் பணத்திற்கு என்ன போகிறேன் என பலரும் கேட்டார்கள்.. எனக்கும் மலைப்பாகத்தான் இருந்தது.. ஆனாலும் அங்கே இங்கே புரட்டி பணத்தை கட்டிவிட்டேன். ஆனால் இதுபோன்று மருத்துவமனையே உதவி செய்யும் விஷயம் வெளியில் உள்ள நாலுபேருக்கு தெரியவேண்டும் என்றால் விளம்பரம் அவசியம் தான்.. ‘தர்மதுரை’ பத்தில் நான் டாக்டராக நடித்தபோது டாக்டர்களின் மேன்மையை இன்னும் அதிகமாக அறிந்துகொண்டேன்” என கூறினார்.

meenakshi missionmeenakshi mission hospitalTrishaVijay Sethupathi