நடிப்புக்கு முழுக்கு ; தயாரிப்பில் இறங்கினார் விஜயலட்சுமி..!

‘சென்னை–28’ படம் மூலம் தமிழ்சினிமாவில் அடையாளம் பெற்றவர்களில் நடிகை விஜயலட்சுமியும் ஒருவர். இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற முத்திரையை விட, சென்னை-28 படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘கற்றது களவு’ வெண்ணிலா வீடு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். இருந்தாலும் அவரது நினைப்பெல்லாம் திரையுலகில் தயாரிப்புத்துறையில் இறங்கி சாதிக்கவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. இப்போது அந்த எண்ணம் வலுப்பெற்றுள்ளதால் படங்களில் நடிப்பதை டோட்டலாக நிறுத்திவிட்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தும் விட்டார்.

தனது நிறுவனத்திற்கு ‘டீ டைம் டாக்ஸ்’ (Tea Time Talks) என அழகான பெயரையும் சூட்டியுள்ளார்.. இன்னும் சில நாட்களில் தனது நிறுவனம் தயாரிக்க உள்ள படம், நடிகர் நடிகைகள், டெக்னீசியன்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட இருக்கிறார் விஜயலட்சுமி.

அகத்தியன்அஞ்சாதேகற்றது களவுசென்னை-28டீ டைம் டாக்ஸ்விஜயலட்சுமிவெண்ணிலா வீடு