விஜயலட்சுமியின் வருங்கால கணவர் இயக்கும் ‘பண்டிகை’..!

இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற முத்திரை தன் மேல் விழாமல், ‘சென்னை–28’ படம் மூலம் தமிழ்சினிமாவில் மூலம் நடிகையாக அடையாளம் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சில மாதங்களுக்கு முன் நடிப்பை விட்டு விலகுவதாகவும் ‘டீ டைம் டாக்ஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படங்களை தயாரிக்கப்போவதாகவும் அறிவித்தார்.

அதன்படி இப்போது பண்டிகை என்கிற படத்தை தயாரிக்கிறார். படத்தை இயக்குவது விஜயலட்சுமியின் வருங்கால கணவரான பெரோஸ் என்பவர் தான். இவர் வல்லினம் படத்தில் இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். இந்தப்படத்தில் கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்க, கயல் ஆனந்தி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஆனந்திகிருஷ்ணாசென்னை-28பண்டிகைபெரோஸ்வல்லினம்விஜயலட்சுமி