‘தமிழன் என்று சொல்’ ; தாரக மந்திரத்தை டைட்டிலாக்கிய கேப்டன்..!


தனது மகன் சண்முகபாண்டியனின் அடுத்த படத்தை ‘தமிழன் என்று சொல்’ என்கிற அவரது தாரக மந்திரமான கர்ஜிக்கும் டைட்டிலுடன் அறிவித்துவிட்டார் கேப்டன் விஜயகாந்த். இந்தமுறை படத்தை இயக்குவதும் அருண் பொன்னம்பலம் என்கிற புதியவர்தான். ஏற்கனவே வரலாற்று பின்னணியுடன் கூடிய கதையாக கேப்டன் தேடிவருவதாக அரசால் புரசலாக ஒரு செய்தி அடிபட்டு வந்தது.

தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கேப்டனின் மன்னர் கால கெட்டப்பை பார்க்கும்போது அது உண்மைதான் என நிரூபணமாகியுள்ளது. படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். வழக்கமாக கேப்டன் படங்களை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தான் தயாரிப்பது வழக்கம். ஆனால் இந்தமுறை கோவர்த்தினி வரதராஜன் என்பவர் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

L.K.SuthishShanmugapandiyanThamizhan Endru SollVijayakanth