இராமநாராயணின் ஆசியுடன் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் முரளிராமசாமி தயாரிக்கும் 100 வது படம் தான் தற்போது அட்லி இயக்கத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையில் விஜய் நடித்துவரும் அவருடைய 61வது படம்.. பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேல், கோவைசரளா, சத்யன் ஆகியோருடன் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர் நடிகையர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் முக்கியமான பல காட்சிகள் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன.
இப்படத்தின் பர்ஸ்ட்லுக் இளையதளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜுன் மாதம் 22ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இதன் ஆடியோ வெளியீட்டுவிழாவை ஆகஸ்ட்மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் படம் திரைக்கு வருகிறது.