விஜய் – விக்ரம் பிரபு கூட்டணியில் புதிய படம்..!

விக்ரம் பிரபுவின் கோணத்தில் இருந்து செய்தியை ஆரம்பிப்போம்.. ‘அரிமா நம்பி’ வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, ‘சிகரம் தொடு’, ‘தலப்பாக்கட்டி’ உட்பட மூன்று படங்களில் பிசியாக இருக்கிறார் விக்ரம் பிரபு. இதில் ‘தலப்பாக்கட்டி’ மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘உஸ்தாத் ஹோட்டல்’  படத்தின் ரீமேக் ஆகும்.

மலையாளத்தில் இந்தப் படத்தை தயாரித்த லிஸ்டின் ஸ்டீபனும் ராடன் பிக்சர்ஸ் சார்பாக ராதிகாவும் சேர்ந்து தமிழில் இந்தப்படத்தை
தயாரிக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஏற்கனவே ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தை தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ‘தலப்பாக்கட்டி’யில் விக்ரம் பிரபுவுடன் ஏற்பட்ட நட்பால் அவரை வைத்து இன்னொரு படத்தையும் தயாரிக்க இருக்கிறார் லிஸ்டின் ஸ்டீபன். இந்தப்படத்தை இயக்குகிறார் ஏ.எல்.விஜய். ‘சைவம்’ படத்திற்கு பிறகு தனது பாதையில் இருந்து மாறி ஒரு முழு நீள ரொமாண்டிக் படமாக இதை உருவாக்க இருக்கிறாராம் விஜய்.

 

 

AL VijayArima NambiThalappakattiVikram Prabhuஅரிமா நம்பிஉஸ்தாத் ஹோட்டல்ஏ.எல்.விஜய்தலப்பாக்கட்டிவிக்ரம் பிரபுவிஜய்