திரையில் தோன்றினாலே அதிரடி பன்ச் வசனங்களால் அதிரவைப்பவர் விஜய்.. காதல் வசனங்களால் கலகலப்பூட்டுபவர்.. ஆனால் மேடையில் ஏறினால் மட்டும் சாதுப்பூனையாக மாறிவிடுவார்.. அளவான பேச்சு, அளவான புன்னகை என அப்டியே படத்தில் பார்ப்பதற்கு நேர் எதிராக மாறிவிடுவார்..
ஆனால் அப்படிப்பட்ட விஜய்யா இது என நேற்று முன்தினம் நடைபெற்ற ‘தெறி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அனைவரையும் தனது பேச்சால் வாய்பிளக்க வைத்துவிட்டார். பின்னே சமந்தாவை செல்பி புள்ள என்றும் எமியை குல்பி புள்ள என்றும் விஜய் போது மேடையில் வர்ணிக்கிறார் என்றால் அது நிச்சயம் விஜய்யிடம் காணப்படும் புது மாற்றம் தான்..