விஜய்யுடன் மோதும் மலையாள வில்லன் ; ஆதரவாக மலையாள காமெடியன்..!

தெறி படத்தில் விஜய் நடிக்கும் மூன்று கேரக்டர்களில் ஒன்று தான் கேரளாவில் வசிக்கும் ஜோசப் குருவில்லா.. அனேகமாக இந்த கேரக்டர் பிளாஸ்பேக்கில் வரும் என தெரிகிறது.. இந்த கேரளா சம்பந்தப்பட்ட காட்சிகளில் விஜய்க்கு ஆதரவாக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் மலையாள காமெடி நடிகரான கோட்டயம் பிரதீப்..

மலையாள சினிமாக்களில் இவர் திரையில் தோன்றினாலே போதும் ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்களாம். அதேபோல வில்லன்களில் ஒருவராக பினீஸ் பாஸ்டின் என்கிற மலையாள வில்லன் நடிகர் ஒருவரும் இந்தப்படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த மாதம் வெளியான நிவின்பாலியின் ‘ஆக்சன் ஹீரோ பிஜூ’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

AtleeSamanthaTheriVijayஅட்லிதெறிவிஜய்