ஸ்கேட்டிங் வீராங்கனை சிறுமிக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்..!

தமிழ்நாடு ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷன் கீழ் இயங்கும் சேலம் மாவட்டம் ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோஷியஷனில் உள்ள ஜோஸ் க்வீன் கிளப்பில் பயிற்சி பெற்ற அம்மாப்பேட்டையை சேர்ந்த மூன்றறை வயதெ ஆகும் நேத்திரா என்கிற பிரீ.கே.ஜி படிக்கும் மாணவி 2016-2017 ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆண்டில் மாவட்ட மாநில தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 3லிருந்து 5ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தேர்வில் 4 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு இரண்டு தக்கப்பதக்கங்களை பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இத்தேர்ச்சி மூலம் “ஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ் சர்வதேச போட்டி 2017” மே மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள போட்டியில் மாணவிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் மூன்றறை வயதுள்ள மாணவி A.P. நேத்திரா கலந்துகொள்ள உள்ளார்.

இந்த மாணவியை நடிகர் விஜய் அவர்களிடம் அழைத்துச்சென்று அவரின் பாராட்டையும், ஊக்குவிப்பையும் பெற ஆசைப்பட்டனர். இதை அறிந்த விஜய் நேத்திராவையும் அவளது பெற்றோர்களையும் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அசோஷியேஷன் உறுப்பினர்களையும், கிளப் உறுப்பினர்களையும், மாணவியர், , நேரில் அழைத்து மனமார்ந்து பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்து ஊக்கமளித்துள்ளார்..

NethiraVijayஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ்நேத்திராவிஜய்