ஐந்து கோடி செலவில் விஜய்யின் அறிமுக பாடல்..!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் தலக்கோணம் பகுதியில் உள்ள நீர்விழ்ச்சியில் முகாமிட்டுள்ளனர் படக்குழுவினர். இங்கேதான் விஜய்யின் அறிமுகப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது. விஜய்யின் ஒப்பனிங் சாங் என்றால் சும்மாவா..?

தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்தப்பாடலுக்காக சுமார் ஐந்து கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த ஒப்பனிங் பாடலுக்காக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக 2௦௦ கார்பெண்டர்கள் வேலை பார்த்து செட் ஒன்றை அமைத்துள்ளார்களாம். விஜய் படங்களிலேயே மிக அதிக பட்ஜெட் இந்தப்படத்திற்காகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

‘புலி’தேவிஸ்ரீபிரசாத்விஜய்