ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பேய் பசி’. இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஒரு ஹைலைட்டான விஷயம் என்றால் இதில் விஜய்சேதுபதி ஒரு பாடலை பாடியிருப்பது இன்னொரு ஸ்பெஷல்.
இந்த படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு வித்தியாசமான, அனைவரையும் உடனே கவரும் ஒரு குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய்சேதுபதி தான் மிக பொருத்தமானவர் என எல்லோரும் உடனே முடிவு செய்தனர். நல்ல படங்களுக்கு என்றுமே தனது ஆதரவை தரும் விஜய்சேதுபதி ‘பேய் பசி’ படத்திற்காக பாடகராக மாறியுள்ளார்.
வசனம் பேசுவதில் தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து மிகப்பெரிய வெற்றியை பிடித்திருக்கும் விஜய்சேதுபதி இந்த கிளப் பாடலை தனது அதே வசீகர பணியில் பாடி அசத்தியுள்ளார் என கூறப்படுகிறது.