விஜய்சேதுபதி படத்திற்கு புதிய கெளரவம்..!

‘விக்ரம் வேதா’விற்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவரது படங்கள் பண்டிகை நாட்களில் இதுவரை ரிலீசானது இல்லை.. இப்போது தான் நடித்துள்ள ‘கருப்பன்’ ஆயுதபூஜை கொண்டாட்டமாக வெளியாவதால் உற்சாகத்தில் இருக்கிறார் விஜய்சேதுபதி.

மேலும் இதனை மெய்ப்பிக்கும் வகையில் விஜய்சேதுபதியின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா’ படத்தை படப்பிடிப்பு செல்லும் முன்பே ஏ&பி குரூப்ஸ் என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது. ‘

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா‘ என்ற வெற்றிப்படத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஜூங்கா’வின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்தநிலையில் ஏ&பி குரூப்ஸ் நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய்சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் என்றே கருதப்படுகிறது..

A&P GroupsGokulIdharkuthaane Aasai Pattai BalakumaraJingaKashmoorasayesha saigalVijay SethupathiVikram Vedhaஇதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஏ&பி குரூப்ஸ்கருப்பன்கெளரவம்கோகுல்சயீஷா சைகல்ஜூங்காவிக்ரம் வேதாவிஜய்சேதுபதி