சர்வதேச திரைப்பட விழாக்களில் கலக்கும் விஜய்சேதுபதி படம்..!

 

ஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ப்ரேகு ஃபிலிம் ஃபெஸ்டிவல், ஜாக்ரான் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என ஏற்கனவே பல நாடுகளின் திரைப்படவிழாக்களை பார்த்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படம், இந்த வருடம் பெங்களூருவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படங்களுக்கான வரிசையில் தேர்வுக்குழு சிறந்த திரைப்படம் என்ற விருதை வாங்கியது. 

அதேபோல இந்த வருடம் கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம் என்ற அந்தஸ்தையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, வரவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்படவுள்ளது. 

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஸ், ஜெயபிரகாஷ், துளசி ஆகியோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர். “இவ்வகையான விருதுகள் எங்களை போல் உள்ள வளரும் கலைஞர்களுக்கு ஒரு ஊக்கமாய் அமைகிறது” என்கிறார் தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ள ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் இயக்குனர் அருண்குமார்.

அருண்குமார்ஐஸ்வர்யா ராஜேஸ்ஜாக்ரான் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ஜெயபிரகாஷ்துளசிபண்ணையாரும் பத்மினியும்ப்ரேகு ஃபிலிம் ஃபெஸ்டிவல்விஜய் சேதுபதிஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல்