கொடுத்த வாக்கை காப்பாற்ற ரிஸ்க் எடுக்கும் விஜய்சேதுபதி..!

விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை ’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப்படத்தை ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ சயீஷா சைகல் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அத்துடன் முக்கியமான கேரக்டரில் யோகி பாபுவும் நடிக்கிறார். ‘ஆண்டவன் கட்டளை’ படத்திற்கு பிறகு யோகி பாபு, இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வரும் வகையில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அறுபது சதவீத படம் பிரான்சிலும், மீதமுள்ள படம் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட இருக்கிறது.

“இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’விற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ கதை தயாரானதும், அவரை சந்தித்து கதையை சொல்லத்தொடங்கினேன். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, இந்த கதையை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டார்” என்கிறார் இயக்குனர் க்குள்.

ஆனாலும் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியை தாண்டுமாம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் படமும் இதுதான். அதனால் வேறு தயாரிப்பாளரைக் காட்டிலும் நாமே தயாரிப்பது தான் பொருத்தமானது என்று கூறி அவரே தயாரிக்கும் ரிஸ்க்கை எடுத்துள்ளாராம்..

GokuljungaSayyeshaVijay Sethupathiகோகுல்சாயிஷாவிஜய் சேதுபதி