நான்காவது முறையாக விஜய்சேதுபதியுடன் இணையும் காயத்ரி..!

“ப்ப்ப்பா.. யார்டா இது பேய் மாதிரி இருக்கு” என்று யாரைப்பார்த்துச் சொன்னாரோ அவருடன் தான் நான்காவது முறையாக இணைந்து நடிக்க உள்ளார் விஜய்சேதுபதி.. ஆம்.. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அதே காயத்ரியுடன் தான்.

தொடர்ந்து ரம்மி, புரியாத புதிர் ஆகிய படங்களில் விஜய்சேதுபதியுடன் நடித்த காயத்ரி, தற்போது, ‘ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்’ படத்திலும் இணைந்துள்ளார்.

“காயத்ரி மிக சிறந்த நடிகை. அவரது திறமைக்கு ஏற்ற பாத்திரங்கள் அவருக்கு கிட்டவில்லை என்பதுதான் என் கருத்து. ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ அவருக்கு ஒரு ராசியான படமாக அமையும் . இந்தக் கதாபாத்திரம் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுக்கும்.” என்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார்.

அம்மே நாராயணா புரடக்சன்ஸ் மற்றும் 7C என்டர்ர்டைன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி உடன் பிரதான வேடத்தில் நடிக்கிறார் கவுதம் கார்த்திக்.

GayathriVijay Sethupathiஆறுமுககுமார்கவுதம் கார்த்திக்காயத்ரிவிஜய்சேதுபதி