விஜய் சேதுபதி – யோகிபாபுவை நட்பாக்கிய ‘ஆண்டவன் கட்டளை’..!

இன்றைக்கு தேதியில் புதுமுகங்கள் நடித்த படம் என்றாலும் போஸ்டரை பார்க்கும் ரசிகர்கள் அதில் மொட்ட ராஜேந்திரன் அல்லது யோகிபாபு இருவரின் தலை தெரிந்தால் போதும், தயங்காமல் தியேட்டருக்குள் நுழைந்து விடுகிறார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை வசீகரிக்கும் காமெடியனாக சீராக வளர்ந்து வருகிறார் யோகிபாபு..

அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய்சேதுபதியின் நண்பனாக படம் முழுதும் வரும் கேரக்டரில் நடித்துள்ளார் யோகிபாபு. இந்தப்படத்தில் 30 நாட்கள் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த அனுபவத்தில் அவருடன் நல்ல நட்பை வளர்த்துக்கொண்டதோடு, நடிப்பில் நிறைய நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டாராம் யோகிபாபு.

‘காக்காமுட்டை’ படம் மூலம் யோகிபாபுவின் நகைச்சுவை திறமையை வெளிச்சம்போட்டு காட்டிய மணிகண்டன் தான் இந்தப்படத்தின் இயக்குனர் என்பதால் இந்தப்படத்தின் மூலம் யோகிபாபு இன்னும் ஒருபடி உயரம் மேலே போவார் என்பது உறுதி.

Vijay SethupathiYogi BAbuயோகிபாபுவைவிஜய் சேதுபதி