தாய்லாந்துக்கு பறக்கும் விஜய்சேதுபதி-அஞ்சலி..!

சூப்பர் ஹிட்டான பியார் பிரேமா காதல் வெற்றிப்படத்தை தொடர்ந்து கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர் ராஜா, இர்பான் மாலிக் மீண்டும் இணைந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்..

சேதுபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமான இதன் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது…

இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. 40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ளது. அந்தளவுக்கு கதையும் சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளி நாடுகளில் நடத்துகிறோம் என்கிறார் இயக்குனர் அருண்குமார்.

AnjaliArunkumarVijay SethupathiYuvan Shakar Rajaஅஞ்சலிஅருண்குமார்இர்பான் மாலிக்எஸ்.என்.ராஜராஜன்ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ்கே புரொடக்சன்ஸ்சேதுபதிபியார் பிரேமா காதல்யுவன் ஷங்கர் ராஜாயுவன்சங்கர் ராஜாவிஜய் சேதுபதிவிஜய்சேதுபதி