வரும் 21ஆம் தேதி தான் இயக்கியுள்ள ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் வெளியாக இருப்பது குறித்து ஒரு உணர்ச்சிப்பூர்வமான மனநிலையில் இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவரது பேச்சில் இருந்து அதை உணர முடிந்தது. “நினைத்த மாதிரி படத்தை எடுத்துட்டேன்னு திருப்தியா இருக்கு” என்றவரிடம் அவரது முதல் படமான கோலிசோடா’வுக்கும் இந்தப்படத்திற்குமான பட்ஜெட் வித்தியாசம் பற்றி கேட்கப்பட்டது.
“பட்ஜெட் என்பது பெரிய விஷயமே இல்லை.. கோலிசோடா கதைக்கு கோயம்பேடு மார்க்கெட் மட்டுமே போதுமானதாக இருந்தது.. ஆனால் இந்தப்படம் தமிழ்நாட்டில் இருந்து உத்திரகான்ட் வரைக்கும் ட்ராவல் பண்ற படம்.. இதுல டெக்னீஷியன் சம்பளம், ஆர்ட்டிஸ்ட் வேல்யூ கூடியிருக்கே தவிர ‘கோலிசோடா’வுக்கு வேலைபார்த்த அதே முறையைத்தான் பின்பற்றியிருக்கிறேன்” என்றா விஜய் மில்டன்..
படத்தின் ஹீரோ விக்ரம் பேசும்போது, “இந்தப்படத்துல நான் வேலைபார்க்கும்போது விஜய் மில்டனை எனக்கேத்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா மாத்த முயற்சி செய்தேன். ஆனா அவரு அப்படியே தான் இருந்தாரு.. மாத்த முயற்சி பண்ணின நான் தான் அவருக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திக்கிட்டேன்.. இன்னைக்கு கூட சமந்தா பிரஸ்மீட்டுக்கு வரலையேன்னு கேட்டேன்… வரலைன்னா விட்ருவோம் என ரொம்ப கூலா சொல்லிட்டார். அதுதான் விஜய் மில்டன்” என்றார்.
இந்தப்படத்திற்காக நேபாளத்தில் பல காட்சிகள் படமாக்கினார்கள் அல்லவா..? கதைப்படி உத்திரகான்ட்டுக்கான லொக்கேஷகளைத்தான் நேபாளத்தில் செலக்ட் செய்து படமாக்கியுள்ளார்களாம். காரணம் தமிழ்சினிமா இன்னும் பார்க்காத பல அழகிய லொக்கேஷன்கள் நேபாளத்தில் இருக்கின்றன என்கிறார் விஜய் மில்டன்.