‘மெர்சல் படக்குழுவினரை தங்கத்தால் குளிப்பாட்டிய விஜய்..!

தனது ஒவ்வொரு படமும் முடிந்த பின்போ, அல்லது வெளியான பின்போ, விஜய் தனது படங்களில் பணியாற்றும் படக்குழுவினருக்கு பரிசு வழங்கி கௌரவிப்பது வழக்கம். இதற்கு முன் புலி படக்குழுவினர் 250 பேருக்கு தங்க காசு வழங்கினார் விஜய்.

அதேபோல பைரவா படம் முடிந்த பின்னர் அந்தப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு தங்கத்தில் செயின் பரிசாக அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தற்போது அட்லீ இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில் தன்னுடன் பணியாற்றிய படக்குழுவினர் சுமார் 200 பேருக்கு தங்க காசுகள் வழங்கி அவர்களை பாராட்டி கௌரவித்துள்ளார் விஜய்.

AtleeMersalVijayஅட்லீமெர்சல்விஜய்