‘கத்தி’ டீமிற்கு விஜய் அளித்த விருந்து..!

ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய் நடித்துவரும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 நாட்களை தாண்டியுள்ளது. இந்த 40 நாட்களிலும் படப்பிடிப்பின்போது தீயாக வேலை செய்த படப்பிடிப்புக் குழுவினரை சந்தோசப்படுத்தும் விதமாக சமீபத்தில் அவர்களுக்கு பிரியாணி விருந்து அளித்து அசத்தியுள்ளார் விஜய்.

இந்த விருந்தின்போது விஜய், முருகதாஸ், சதீஷ் ஆகியோர் படப்பிடிப்புக் குழுவினரை அமரவைத்து தங்கள் கைகளால் பிரியாணி பரிமாறி அவர்களை மேலும் பரவசப்படுத்தியுள்ளனர். இதற்கும் விஜய் பிறந்தநாளுக்கும் எந்த சம்பந்தமில்லை.. இது ச்சும்மா ட்ரெய்லர் தான்.. அனேகமாக ஜூன்-22ல் இதைவிட பெரிய விருந்து படப்பிடிப்புக் குழுவினருக்கு காத்திருக்கிறது என்றே தெரிகிறது.

A R MurugadassKaththiSathishVijayஏ.ஆர்.முருகதாஸ்கத்திசதீஷ்விஜய்