பெண் ரசிகைகளுக்கு மனம் இறங்கிய விஜய் ரசிகர்கள்..!

விஜய், அஜித் படங்கள் ரிலீஸானால் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தியேட்டர் பக்கம் சாதாரண மக்கள் போகவே முடியாது.. பெண்கள், அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.. ரசிகர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட ஒரு வாரத்திற்கு குறையாமல் ஆகும் என்பதால், தியேட்டர் பக்கம் நெருங்க முடியாது..

ஆனால் ரசிகர்களை போல விஜய்க்கும் தீவிர ரசிகைகள் இருப்பார்கள் தானே.. அவர்களின் முதல் நாள் முதல் காட்சி ஆசையை மனதில் கொண்டு காரைக்குடியை சேர்ந்த விஜய் ரசிகர்கள், காரைக்குடியில் உள்ள தியேட்டர் ஒன்றில் பெண் ரசிகைகளுக்கென தனியாக சிறப்பு காலை காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் பெண் ரசிகைகள் தரப்பு மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.

Amy JacksonAtleeKalaipuli S DhhanuSamanthaTheriVijayVijay Fans