புதிய உலகத்தில் அடியெடுத்து வைக்கும் விஜய்..!

 

சமகாலப்படங்களை விட சரித்திரகால படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இயக்குனரான சிம்புதேவன், விஜய்யை வைத்து தான் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று ஆரம்பிக்கிறார். இதற்காக ஈ.சி.ஆரில் உள்ள பனையூரில் அரண்மனை போன்று பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது.

இன்று பாடல் காட்சியுடன் துவங்க இருக்கும் படப்பிடிப்பில் விஜய் போர் வீரனாகவும் ஹன்ஷிகா இளவரசியாகவும் நடிக்கிறார்கள். மொத்தம் 14௦ நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட 5௦ நாட்கள் இந்த அரண்மனை செட்டில் தான் நடைபெற இருக்கிறதாம்.

விஜய்க்கு இன்னொரு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, முக்கிய வேடங்களில் ஸ்ரீதேவியும் ‘நான் ஈ’ சுதீப்பும் நடிக்கிறார்கள். படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஆக்ஷன் ஏரியாவிலேயே பயணப்பட்டுக்கொண்டு இருக்கும் விஜய்க்கு, இந்த அரண்மனை வாசமும், போர்க்களமும் புதிய அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.

‘நான் ஈ’ சுதீப்சிம்புதேவன்தேவிஸ்ரீபிரசாத்விஜய்ஸ்ரீதேவிஸ்ருதிஹாசன்ஹன்ஷிகா