எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ‘சைத்தான்’ பர்ஸ்ட் லுக்..!

விஜய் ஆண்டனி நடிக்கும் படம் என்றால் நிச்சயம் ஏதாவது வித்தியாசமாக இருக்கும் என்பதை அவரது ஒவ்வொரு படமும் நிரூபித்து வருகின்றன. அதற்கு கட்டியம் கூறுவதுபோல ஒவ்வொரு முறையும் தனது படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையே அசத்தலாக வெளியிட்டு ஆர்வத்தை தூண்டுவார் விஜய் ஆண்டனி.. சமீபத்திய அவரது ஹிட்டான ‘பிச்சைக்காரன்’ படத்தையே அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அதேபோல தற்போது விஜய் ஆண்டனி நடித்து ஜுன் மாதம் ரிலீசுக்கு தயாராகிவரும் ‘சைத்தான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் மிரட்டலாக வெளியிட்டுள்ளனர். பாம்புகளின் கோரப்பிடியில் சிக்கி விஜய் ஆண்டனி போராடுவது போல இருக்கும் இந்த ‘சைத்தான்’ பர்ஸ்ட் லுக், ரஜினியின் கபாலி பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஞாபகப்படுத்தவும் தவறவில்லை. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

FATIMA VIJAY ANTONYPradeep KrishnamoorthySaithanVijay Antonyசைத்தான்விஜய் ஆண்டனி