விஜய் ஆண்டனி-அர்ஜூன் இணைந்து மாஸ் காட்டும் ‘கொலைகாரன்’…!

காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப்படத்தில் ஹைலைட்டான அம்சமே நடிகர் அர்ஜூன் இந்தப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்து வருவதுதான். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்

ArjunKolaikaranVijay Antonyகொலைக்காரன்விஜய் ஆண்டனி